TNPSC Thervupettagam

ஷிவ் சத்ரபதி மாநில விளையாட்டு விருதுகள்

February 25 , 2018 2495 days 901 0
  • இந்திய கிரிக்கெட் அணியின் உறுப்பினர்களான அஜிங்க்ய ரஹானே, ரோஹித் சர்மா ஆகியோருக்கு ஷிவ் சத்ரபதி மாநில விளையாட்டு விருதுகள் மகாராஷ்டிரா அரசால் வழங்கப்பட்டுள்ளது.
  • ரோஹித் (2015-2016) மற்றும் ரஹானே (2016-2017) ஆகியோர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடியமைக்காக (Outstanding Performance) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  • மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இவ்விருவருக்கும் பதக்கம், சான்றிதழ், ரூபாய் 3 லட்சம் வழங்கப்பட்டது.
  • முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பிரவீன் ஆம்ரே 2016-2017 ஆண்டிற்கான பயிற்சியாளருக்கான விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதக்கம், சான்றிதழ், ரூபாய் ஒரு லட்சம் வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்