மத்திய நிதித்துறை அமைச்சகம் குடிமக்கள் வரி செலுத்தக் கூடிய பத்திரங்களில் உச்ச வரம்பு ஏதுமின்றி முதலீடு செய்ய75 சதவிகிதம் வட்டி கொண்ட சேமிப்பு (வரிக்குட்பட்டது) பத்திரங்கள்- 2018 என்ற திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
இந்த பத்திரங்கள் 7 வருட முதிர்வுக் காலத்தோடு75% ஆண்டு வட்டியை அரையாண்டிற்கொரு முறை கிடைக்கும் வகையில் கொண்டுள்ளது.
இந்த பத்திரங்கள் டீமேட் வடிவத்தில் (Bond Ledger Account - பத்திர பேரேடு கணக்கு) அதாவது காகிதமற்ற மின்னணு வடிவில் மட்டுமே கிடைக்கும்.
இந்த பத்திரங்கள் பிரிக்கப்படாத இந்து குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் (கூட்டு வைப்புகள் உட்பட - Joint Holdings) முதலானோர் முதலீடு செய்யத் தக்கவையாகும்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்த பத்திரங்களில் முதலீடு செய்யத் தகுதியற்றவர்கள் ஆவர்.
பத்திர உரிமையாளரின் வரி நிலைமையைப் பொறுத்து வருமான வரிச் சட்டம்- 1961 என்ற சட்டத்தின் கீழ் இப்பத்திரங்களின் மீதான வட்டி வரிக்குள்ளாக்கப்படும்.
ஆனால் இந்த பத்திரங்கள் சொத்துவரிச் சட்டம்-1957 என்ற சட்டத்தின் கீழ் சொத்து வரியிலிருந்து விலக்கு பெற்றுள்ளது.
மேலும் இப்பத்திரங்களை வங்கி நிறுவனங்கள், வங்கியல்லாத நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களிலிருந்து கடன்களை பெறுவதற்காக பிணையாகப் (collateral) பயன்படுத்த முடியாது.
இப்பத்திரங்கள் வேறு ஒருவருக்கு மாற்றக் கூடியவை அல்ல. மேலும் இரண்டாம் நிலை சந்தையில் வர்த்தகப் பரிமாற்றம் செய்யத்தக்கவையும் அல்ல.