தமிழ்நாடு மாநில அரசானது, ஏழு பேரூராட்சி அமைப்புகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தியுள்ளது.
போளூர், செங்கம், கன்னியாகுமரி, சங்ககிரி, கோத்தகிரி, அவினாசி மற்றும் பெருந்துறை ஆகியப் பேரூராட்சிகள் அதிகாரப்பூர்வமாக நகராட்சிகளாக அறிவிக்கப் பட்டுள்ளன.
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் விதிகளின் கீழ் இந்த நகராட்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த நான்கு ஆண்டுகளில் மாநில அரசு ஆனது, 10 புதிய மாநகராட்சிகளையும் 31 நகராட்சிகளையும் உருவாக்கியுள்ளது.
149 பஞ்சாயத்துகள், 4 நகராட்சிகள் மற்றும் 5 பேரூராட்சிகள் ஆகியவை மொத்தம் 16 மாநகராட்சிக் கழகங்களுடன் இணைக்கப்படும் செயல்முறையில் உள்ளன.
இந்த இணைப்பு மற்றும் தரம் உயர்த்துதல் செயல்முறையானது முடிவடைந்ததும், இந்த மாநிலத்தில் பெருநகரச் சென்னை மாநகராட்சி உட்பட 25 நகராட்சிகள், 146 நகராட்சிகள் மற்றும் 491 பேரூராட்சிகள் இருக்கும்.