7-வது பொருளாதாரக் கணக்கெடுப்பு
July 30 , 2019
1948 days
943
- மத்திய அரசு திரிபுரா மாநிலத்திலிருந்து 7-வது பொருளாதாரக் கணக்கெடுப்பைத் தொடங்கியிருக்கின்றது.
- இந்தக் கணக்கெடுப்பு மற்ற மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தொடங்கப்படவிருக்கின்றன.
- பொருளாதாரக் கணக்கெடுப்பு (Economic Census - EC) என்பது நாட்டின் புவியில் எல்லைக்குள் அமைந்துள்ள அனைத்து நிறுவனங்கள்/அலகுகளின் மொத்த எண்ணிக்கையாகும்.
- நாட்டில் உள்ள மிகப்பெரிய அளவிலான முறை சாராத் துறை குறித்த தகவலைக் கொண்ட ஒரே ஆதாரம் இதுவாகும்.
- பொருளாதாரக் கணக்கெடுப்பில் வேளாண்மைத் துறை இணைக்கப்படவில்லை.
- இந்தக் கணக்கெடுப்பானது மத்தியப் புள்ளியியல் மற்றும் திட்டச் செயல்படுத்துதல் துறை அமைச்சகத்தினால் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
- தற்பொழுது வரை 6 பொருளாதாரக் கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. அவையாவன :
- முதலாவது EC (1977), இரண்டாவது EC (1980), மூன்றாவது EC (1990), நான்காவது EC (1988), ஐந்தாவது EC (2005), ஆறாவது EC (2013).
Post Views:
943