70 மில்லியன் ஆண்டுகள் பழமையான நத்தை
March 26 , 2024
243 days
290
- ஃபெருசினா எனப்படுகின்ற அழிந்து போன நில வாழ் நத்தையின் புதிய இனத்தினை அறிவியலாளர்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர்.
- இந்த மாதிரியானது சுமார் 72 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிற்காலத்திய கிரெட்டேசியஸ் சகாப்தத்தின் மாஸ்ட்ரிக்டியன் காலத்தில் வாழ்ந்ததாக நம்பப் படுகிறது.
- புதிதாகக் கண்டறியப்பட்ட இனமான ஃபெருசினா பெட்டோஃபியானா, பேலியோஜீன் காலத்தில் இருந்த நில வாழ் நத்தைகளின் சிறிய வகையைச் சேர்ந்தது.
- இது தற்போது சைக்ளோபோராய்டியா என்ற ஒரு பெரு குடும்பத்தில் உள்ள அதன் குடும்பமான ஃபெருசினிடே குடும்பத்தில் ஒன்றாக வகைப்படுத்தப் பட்டுள்ளது.
Post Views:
290