700 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான அந்நிய செலாவணி கையிருப்பு
October 9 , 2024 45 days 77 0
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்புகள் முதன்முறையாக 700 பில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது.
இந்த அதிகளவின் மூலம், 700 பில்லியன் டாலர்களை தாண்டிய சீனா, ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய உலக நாடுகளின் வரிசையில் நான்காவது நாடாக இந்தியா இணைந்துள்ளது.
12.6 பில்லியன் டாலர் அதிகரிப்பு ஆனது 2023 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் தேதிக்குப் பிறகு பதிவான மிகப்பெரிய வாராந்திர கூடுதலாகும்.
இந்தியாவின் கையிருப்பு மதிப்பு ஆனது 2003 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் முதன் முதலில் 100 பில்லியன் டாலர் மதிப்பினைத் தாண்டியது என்ற நிலையில் அடுத்த 100 பில்லியன் டாலர் மதிப்பு உயர்வதற்கு மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகியது.
மூன்றாவது 100 பில்லியன் டாலர் உயர்வு ஆனது (200 பில்லியன் டாலரில் இருந்து 300 பில்லியன் டாலர் ஆக உயர்வு) ஓராண்டிற்குள் எட்டப்பட்டது என்பதோடு கையிருப்பு மதிப்பு ஆனது 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி 29 ஆம் தேதியன்று 300 பில்லியன் டாலரைத் தாண்டியது.
200 பில்லியன் டாலராக இருந்த கையிருப்பு மதிப்பானது சுமார் பத்து மாதங்களில் 300 பில்லியன் டாலராக அதிகரித்தது.
2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 642 பில்லியன் டாலராக உயர்ந்த பிறகு, மறு மதிப்பீட்டு இழப்புகளின் காரணமாக, அடுத்த ஆண்டிற்குள் கையிருப்பு மதிப்பு 525 பில்லியன் டாலராகக் குறைந்தது.