TNPSC Thervupettagam

700 மெகாவாட் அணு உலை

July 10 , 2023 379 days 255 0
  • உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் 700 மெகாவாட் திறன் கொண்ட அணுசக்தி உலையின் வணிக ரீதியிலான உற்பத்தி தொடங்கப் பட்டுள்ளது.
  • இது குஜராத்தில் உள்ள காக்ராபார் அணுமின் நிலையத்தின் (KAPP) 3 ஆம் அலகில் அமைந்துள்ளது.
  • இந்திய அணுசக்திக் கழகம் (NPCIL) ஆனது காக்ராபரில் இரண்டு 700 மெகாவாட் திறன் கொண்ட அழுத்த கன நீர் உலைகளை (PHWRs) கட்டமைத்து வருகிறது.
  • உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 10 அழுத்தக் கன நீர் உலைகளைச் சோதனை அடிப்படையில் நான்கு இடங்களில் கட்டமைப்பதற்கு அரசாங்கம் அனுமதி அளித்து உள்ளது.
  • அவை ஹரியானாவின் கோரக்பூர், மத்தியப் பிரதேசத்தின் சுட்கா, ராஜஸ்தானில் மஹி பன்ஸ்வாரா மற்றும் கர்நாடகாவில் கைகா ஆகிய இடங்களில் அமைக்கப்பட உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்