மத்தியப் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (MNRE) ஆனது, ஒடிசா, மேற்கு வங்காளம், குஜராத், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு (தூத்துக்குடி) மற்றும் கர்நாடகாவின் கடலோரப் பகுதிகளில் பசுமை ஹைட்ரஜன் / பசுமை அம்மோனியா உற்பத்தி ஆலைகளை நிறுவுவதற்குத் திட்டமிட்டுள்ளது.
பசுமை ஹைட்ரஜன்/பசுமை அம்மோனியா உற்பத்தியின் காரணமாக தமிழகத்திற்கு 7,000 மெகாவாட் கூடுதல் மின்சாரத் தேவை ஏற்படும்.
பசுமை ஹைட்ரஜன்/பசுமை அம்மோனியா உற்பத்தியின் காரணமாக 2026-27 ஆம் ஆண்டிற்குள் ஒட்டு மொத்த மின்சாரத் தேவை சுமார் 10,500 மெகாவாட் ஆகும்.
இதில் 1,500 மெகாவாட் தமிழ்நாட்டிலிருந்து வழங்கப்படும்.