2022 ஆம் ஆண்டு ஜனவரி 01 மற்றும் டிசம்பர் 31 ஆம் தேதிக்கு இடையில் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தினால் (CBFC) சான்றளிக்கப்பட்ட முழு நீளத் திரைப் படங்கள் மற்றும் குறும்படங்கள் இந்த விருதிற்குத் தகுதி பெற்றன.
மலையாள மொழித் திரைப்படமான ஆட்டம் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது.
ரிஷப் ஷெட்டி, காந்தாரா என்ற திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார்.
சிறந்த நடிகைக்கான விருதை நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்) மற்றும் மானசி பரேக் ஆகியோர் பகிர்ந்து கொண்டனர்.
பொன்னியின் செல்வன் - பகுதி 1 திரைப்படம் ஆனது அதிக (4) விருதுகளை வென்றது; - சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த இசையமைப்பாளர் (பின்னணி இசை).
சிறந்த இசை அமைப்பாளர் விருது ப்ரீதம் (பாடல்கள்), ஏ.ஆர். ரஹ்மான் (பின்னணி இசை) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
இது ஏ.ஆர்.ரஹ்மான் பெற்ற 7வது தேசிய திரைப்பட விருதாகும்.