71-வது உலக சுகாதார மன்றம் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியானது, “அனைவருக்கும் சுகாதாரம்: உலகளாவிய சுகாதார உள்ளடக்கத்திற்கு உறுதியளிப்பு” (Health for All: Commit to Universal Health Coverage) எனும் கருத்துருவின் அடிப்படையில் நடைபெற்றது.
இந்த உலக சுகாதார மன்றத்தில் மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா தலைமையிலான இந்தியக்குழு பங்கேற்றது.
திரு.நட்டா "Walk the Talk" நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து “அனைவருக்கும் சுகாதாரம், அனைவருக்கும் யோகா” என்ற கருத்தை வலியுறுத்தினார்.