71வது அனைத்திந்தியக் கூட்டுறவு வாரம் 2024 – நவம்பர் 14/20
November 17 , 2024 11 days 109 0
ஒரு கூட்டுறவுச் சங்கம் என்பது மக்களுக்குச் சொந்தமான மற்றும் மக்கள் அதன் சரக்குகள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்துவதற்காக மக்களுக்காக நடத்தப்படும் ஓர் அமைப்பாகும்.
அகில இந்தியக் கூட்டுறவு வாரமானது இந்தியாவில் முதன்முதலில் 1953 ஆம் ஆண்டில் அனுசரிக்கப் பட்டது.
இந்த ஆண்டிற்கான இந்த வார அளவிலானக் கொண்டாட்டத்தின் கருத்துரு, “Role of Cooperatives in Building Viksit Bharat” என்பதாகும்.
வங்கித் துறையில் முதல் கடன் வழங்கீட்டுக் கூட்டுறவுச் சங்கம் ஆனது வங்காள அரசாங்கத்தின் ஆதரவுடன் 1903 ஆம் ஆண்டில் உருவாக்கப் பட்டது.
இந்தியாவின் கூட்டுறவு கடன் சங்கங்கள் சட்டம் ஆனது 1904 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதியன்று இயற்றப்பட்டது.
1919 ஆம் ஆண்டில் கூட்டுறவு ஆனது மாநிலப் பட்டியலில் ஒன்றாக மாறியது.
1938 ஆம் ஆண்டில் கடன் சுமை தீர்வு மற்றும் நில மேம்பாட்டிற்கானக் கடன்களை வழங்குவதற்காக நில அடமானக் கூட்டுறவு வங்கிகள் நிறுவப்பட்டன.
அமுல் நிறுவனம் ஆனது 1946 ஆம் ஆண்டில் ஆனந்த் கிராமத்தில் கைரா மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் லிமிடெட் (KDCMPUL) ஆக நிறுவப்பட்டது.
தற்போது, உலகின் மிகப்பெரிய கூட்டுறவு இயக்கமாக இந்தியா மாறியுள்ளது.