TNPSC Thervupettagam

71வது குடியரசு தின அணிவகுப்பு - 2020க்கான விருதுகள்

February 3 , 2020 1637 days 621 0
  • மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சரான ராஜ்நாத் சிங்  2020 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று கொண்டாடப்பட்ட 71வது குடியரசு தின நிகழ்வின் போது நடத்தப்பட்ட சிறந்த காட்சிப்பட அணிவகுப்பிற்கான விருதுகளை வழங்கினார்.
  • இந்த அணிவகுப்பில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களைச் சேர்ந்த 16 காட்சிப் படங்களும் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளைச் சேர்ந்த 6 காட்சிப் படங்களும் என மொத்தம் 22 காட்சிப் படங்கள் இடம் பெற்றன.
  • அசாம் மாநிலமானது ‘தனித்துவமான கைவினைத் திறன் மற்றும் கலாச்சாரத்தின் நிலம்’ என்ற கருப்பொருளைக் கொண்ட காட்சிப் படத்தைக் காண்பித்தது. சாத்ரியா பாரம்பரியத்தை போர்டல் நிருத்யா வடிவத்தில் காண்பித்த அசாம் மாநில காட்சிப் படமானது சிறந்தக் காட்சிப்பட அணிவகுப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • இந்த அணிவகுப்பில் லிங்கராஜாவின் ருகுனா ரத யாத்திரையைச் சித்தரித்த ஒடிசா மாநிலமும் சர்வ தர்ம சம்பாவின் கலாச்சாரத்தை வெளிப்படுத்திய உத்தரப் பிரதேச மாநிலமும் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளன.
  • அரசாங்கத்தின் புதிய முயற்சியான “ஜல் சக்தி திட்டமானது” சிறந்த அணிவகுப்பு காட்சிப் பட விருதினை வென்றது.
  • மத்திய பொதுப் பணித் துறையானது (Central Public Works Department - CPWD) “காஷ்மீர் சே கன்னியாகுமரி” என்ற கருப்பொருளுக்காக சிறப்புப் பரிசினை வென்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்