TNPSC Thervupettagam

72வது இந்திய ராணுவ தினம் - ஜனவரி 15

January 16 , 2020 1778 days 485 0
  • இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின் கடைசி ராணுவத் தளபதியான சர் பிரான்சிஸ் பட்சர் என்பவரிடமிருந்து அப்பொறுப்பை ஏற்ற இந்திய ராணுவத்தின் முதலாவது தளபதியான ராணுவப் பணியாளர் கே.எம். கரியப்பா என்பவரை நினைவு கூறும் வகையில் இத்தினமானது அனுசரிக்கப் படுகின்றது.
  • இந்த ஆண்டில், இந்திய ராணுவ தகவல் தொடர்புப் படையைச் சேர்ந்த தளபதியான டானியா ஷெர்கில் தில்லியில் நடந்த இராணுவ தின அணிவகுப்பில் ஆண்கள் படையை வழிநடத்தினார்.
  • பெண் ராணுவ அதிகாரி ஒருவர் இராணுவ தின அணிவகுப்பிற்கு தலைமை தாங்குவது இதுவே முதல் முறையாகும்.
  • 2020 ஆம் ஆண்டின் இந்திய ராணுவ தினத்தின் கருத்துரு, 'பாதுகாப்புத் துறையில் டிஜிட்டல் மாற்றம்' என்பதாகும்.
  • இந்திய இராணுவமானது 1776 ஆம் ஆண்டில் கிழக்கிந்தியக் கம்பெனியால் கொல்கத்தாவில் உருவாக்கப்பட்டது.
  • அதன் பிறகு, இந்திய இராணுவமானது ஏறக்குறைய 125 ஆண்டுகளுக்கு முன்பு 1895 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 அன்று ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்டது.
  • இராணுவப் பணியாளரான கே.எம். காரியப்பா என்பவர் 1949 ஆம் ஆண்டு ஜனவரி 15 அன்று சுதந்திர இந்தியாவின் முதலாவது இந்திய ராணுவத் தலைவரானார்.
  • இந்திய இராணுவத்தின் குறிக்கோள் 'சுயநலத்திற்கு முன் சேவை' என்பதாகும்.
  • உலகளாவிய தீ சக்தி குறியீடு 2017ன் படி, இந்திய இராணுவமானது உலகின் நான்காவது வலிமையான இராணுவமாகக் கருதப்படுகின்றது.
  • அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இந்தியாவை விட மிகச் சிறந்த இராணுவத்தைக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்