TNPSC Thervupettagam

72வது நிறுவன தினம்

November 29 , 2020 1370 days 441 0
  • தேசிய மாணவர் படையானது தனது 72வது நிறுவன தினத்தை நவம்பர் 22 அன்று கொண்டாடியது.
  • இது உலகின் மிகப்பெரிய சீருடை அணிந்த ஒரு இளைஞர் அமைப்பாகும்.
  • தனது தலைமையகத்தை புது டெல்லியில் கொண்டுள்ள இது ஆயுதப் படைகளின் ஒரு இளைஞர் படையாகும்.
  • இது இந்தியா முழுவதும் உள்ள மேல்நிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலிருந்து மாணவர்களைச் சேர்க்கிற ஒரு தன்னார்வ அமைப்பாகும்.
  • இது ராணுவம், கடற்படை மற்றும் விமானப் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு முத்தரப்புச் சேவை அமைப்பாகும்.
  • இது 1948 ஆம் ஆண்டின் தேசிய மாணவர் படைச் சட்டத்தால் உருவாக்கப்பட்டது.
  • இதன் அடிப்படையை இந்திய பாதுகாப்புச் சட்டம் 1917 என்ற சட்டத்தின் கீழ் உருவாக்கப் பட்ட ‘யுனிவர்சிட்டி கார்ப்ஸ்’ என்ற அமைப்பில்  பார்க்கலாம்.
  • நாட்டின் எல்லை மற்றும் கடலோரப் பகுதிகளில் தேசிய மாணவர் படையை விரிவுபடுத்தும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று அறிவித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்