TNPSC Thervupettagam

73வது உலக சுகாதார மன்றத்தின் சந்திப்பு

May 22 , 2020 1557 days 626 0
  • இந்தியா உள்ளிட்ட 120 நாடுகளைக் கொண்ட ஒரு கூட்டணியானது உலக சுகாதார நிறுவனத்தில் (WHO - World Health Organization) ஆஸ்திரேலியா முன்மொழிந்த ஒரு தீர்மானத்திற்கு தங்களது ஆதரவை அளித்துள்ளன.
  • கோவிட் – 19 தொற்றின் பூர்வீகம் குறித்து சீனா மீது விசாரணை நடத்துவதற்காக “கோவிட் – 19 எதிர்வினை மீதான தீர்மானம்” என்ற தீர்மானத்திற்கு இவை ஆதரவு  அளித்துள்ளன. 
  • இது கோவிட் – 19 வைரஸின் பூர்வீகம் குறித்து நடத்தப்படும் ஒரு தனிச்சுதந்திர விசாரணைக்கான ஒரு தீர்மானமாகும்.
  • சீனா மற்றும் அமெரிக்கா ஆகியவை இந்தத் தீர்மானத்தின் ஒரு பகுதியாக இல்லை.
  • மேலும் சீனா இந்த விசாரணைக்கு எதிராக உள்ளது.
  • தற்பொழுது கிடைத்திருக்கும் தகவல்கள் கொரானா வைரஸ் ஒரு விலங்குவழி நோய் என்பதனை உறுதி செய்கின்றன.
  • விலங்குவழி நோய் என்பது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் ஒரு நோயாகும்.
  • உலக விலங்கு நல அமைப்பானது இந்த வைரஸின் விலங்குவழி நோயின் பூர்வீகம்  குறித்து ஆய்வு செய்வதற்காக கள அடிப்படையிலான திட்டங்களை மேற்கொள்ள இருக்கின்றது.
  • உலக சுகாதார  மன்றமானது WHO-ன் முடிவு எடுக்கும் ஒரு அமைப்பாகும்.
  • இந்தச் சபையின் உறுப்பினர்கள் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் போது சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் சந்தித்துக் கொள்வர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்