TNPSC Thervupettagam

73 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது ரஷியா

July 16 , 2017 2720 days 1247 0
  • ரஷியா 73 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி அவற்றினைச் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியதாக அறிவித்தது.
  • சோயுஸ் 2-1 ஏ ராக்கெட் மூலம் ஒரு புகைப்படச் செயற்கைக் கோள் மற்றும் 72 மைக்ரோ செயற்கைக்கோள்கள் என மொத்தம் 73 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
  • சுமார் 8 மணி நேர பயணத்துக்குப் பிறகு அனைத்து செயற்கைக் கோள்களும் முன்னர் தீர்மானிக்கப்பட்ட அதனதன் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
  • உலகிலேயே முதல்முறையாக மிகவும் சிக்கலான செயற்கைக்கோள்களை ஏவும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
  • விண்ணில் செலுத்தப்பட்டுள்ள கனோபஸ் - வி.ஐகே (Kanopus - V - IK) என்ற புகைப்பட செயற்கைக்கோளானது பூமியைப் பரந்த கோணத்தில் படம் எடுத்து அனுப்பும்.
  • இதன்மூலம் காட்டுத்தீ ஏற்படும் பகுதிகளைத் துல்லியமாக கண்டறியலாம் என்பதுடன் நிலப்பகுதி வரைபடங்களை மேம்படுத்தவும் முடியும் என்று ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான ராஸ்காஸ்மோஸ் தெரிவித்துள்ளது.
  • ரஷியா விண்ணில் செலுத்திய 72 சிறிய செயற்கைக்கோள்களில் ஜப்பான், ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகள் தயாரித்த 10 செயற்கைக்கோள்கள் உள்பட அமெரிக்கா வடிவமைத்த 62 நானோ செயற்கைக்கோள்களும் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்