TNPSC Thervupettagam

74வது இந்திய ராணுவ தினம் - ஜனவரி 15

January 15 , 2022 955 days 376 0
  • இந்திய நாட்டையும் அதன் குடிமக்களையும் பாதுகாப்பதில் வீரமரணம் அடைந்த வீரர்களின் தியாகத்திற்கு வணக்கம் செலுத்தும் வகையில் இந்தத் தினமானது அனுசரிக்கப் படுகிறது.
  • பிரிட்டிஷ் ஜெனரல் பிரான்சிஸ் புச்சரிடமிருந்து பொறுப்பினைக் கைப்பற்றி  இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதியாக ஃபீல்ட் மார்ஷல் K.M. கரியப்பா பதவி ஏற்றதை நினைவு கூறும் விதமாகவும் இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • புச்சர் 1949 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் கடைசி பிரிட்டிஷ் ராணுவத் தளபதியாக இருந்தார்.
  • தேசிய ஆடை வடிவமைப்புத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் உதவியுடன் புதிய ராணுவ போர்க்கள  சீருடையானது உருவாக்கப்பட்டுள்ளது.
  • ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள லோங்கேவாலா என்ற இடத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஒரு பிரம்மாண்ட நினைவுச் சின்ன தேசியக் கொடி பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
  • காதி துணியால் நெய்யப்பட்ட உலகின் மிகப்பெரிய தேசியக் கொடி இதுவாகும்.
  • இந்த நினைவுச் சின்ன  தேசியக் கொடியானது 225 அடி நீளமும், 150 அடி அகலமும், சுமார் 1,400 கிலோ எடையும் கொண்டதாகும்.
  • 1971 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடைபெற்ற  ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போரின் ஒரு மையப் பகுதியாக லோங்கேவாலா திகழ்ந்தது.
  • 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 02 அன்று லேவில் இந்த தேசியக் கொடி பறக்கவிடப் பட்டது முதல், தற்போது 5வது முறையாக இது பொது மக்கள் பார்வைக்கு பறக்க விடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்