TNPSC Thervupettagam

75வது குடியரசு தின சிறப்பம்சங்கள்

January 27 , 2024 175 days 275 0
  • இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பு ஆனது, பல்வேறு துறைகளில் பெண்கள் ஆற்றியப் பங்கைக் குறிக்கும் வகையில் 'பெண்களை மையமாகக் கொண்டதாக" இருந்தது.
  • இதன் பிரதம விருந்தினராக பிரான்சு நாட்டு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் பங்கேற்றார்.
  • முதன்முறையாக, அணிவகுப்பில் இந்திய இசைக்கருவிகளை வாசித்த படி 100 பெண் கலைஞர்கள் பங்கு பெற்றனர்.
  • இந்த ஆண்டு குடியரசு தினத்திற்கான கருத்துரு, 'விக்சித் பாரத்' மற்றும் 'பாரத்: லோக்தந்த்ரா கி மாத்ருகா' என்பதாகும்.
  • கலாச்சார அமைச்சகத்தின் குடியரசு தின அணிவகுப்பு காட்சி வாகனத்தில் B.R. அம்பேத்கர் அவர்கள் அரசியலமைப்பு சட்டத்தினை நாட்டின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் அவர்களிடம் ஒப்படைத்த நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் நிகழ்வுகளும், ஜனநாயக நெறிமுறைகளை வலியுறுத்தும் புராதன சின்னங்களும் இடம் பெற்றிருந்தன.
  • தமிழ்நாட்டு அணிவகுப்பு காட்சி வாகனமானது, மக்களாட்சி முறையின் தாய் எனப் படும் பண்டைய தமிழ்நாட்டில் இருந்த குடவோலை முறையைக் காட்சிப் படுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்