இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பு ஆனது, பல்வேறு துறைகளில் பெண்கள் ஆற்றியப் பங்கைக் குறிக்கும் வகையில் 'பெண்களை மையமாகக் கொண்டதாக" இருந்தது.
இதன் பிரதம விருந்தினராக பிரான்சு நாட்டு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் பங்கேற்றார்.
முதன்முறையாக, அணிவகுப்பில் இந்திய இசைக்கருவிகளை வாசித்த படி 100 பெண் கலைஞர்கள் பங்கு பெற்றனர்.
இந்த ஆண்டு குடியரசு தினத்திற்கான கருத்துரு, 'விக்சித் பாரத்' மற்றும் 'பாரத்: லோக்தந்த்ரா கி மாத்ருகா' என்பதாகும்.
கலாச்சார அமைச்சகத்தின் குடியரசு தின அணிவகுப்பு காட்சி வாகனத்தில் B.R. அம்பேத்கர் அவர்கள் அரசியலமைப்பு சட்டத்தினை நாட்டின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் அவர்களிடம் ஒப்படைத்த நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் நிகழ்வுகளும், ஜனநாயக நெறிமுறைகளை வலியுறுத்தும் புராதன சின்னங்களும் இடம் பெற்றிருந்தன.
தமிழ்நாட்டு அணிவகுப்பு காட்சி வாகனமானது, மக்களாட்சி முறையின் தாய் எனப் படும் பண்டைய தமிழ்நாட்டில் இருந்த குடவோலை முறையைக் காட்சிப் படுத்தியது.