TNPSC Thervupettagam

75வது கோல்டன் குளோப் விருதுகள்

January 10 , 2018 2412 days 846 0
  • 75-வது வருடாந்திர கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் கலிபோர்னியாவின் பேவேர்லி ஹில்ஸ் பகுதியில் நடைபெற்றது.
  • “நெட்பிளிக்ஸ்” நிறுவனத் தயாரிப்பான “மாஸ்டர் ஆஃப் நன் “(Master of None) எனும் நகைச்சுவை – நாடகத் தொடரில் அனைவரையும் கவரும் பாத்திரத்தை ஏற்று நடித்த தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி நடிகரான அஜிஸ் அன்சாரிக்கு 2018-ஆம் ஆண்டின் நகைச்சுவைக்கான சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டுள்ளது.
  • நகைச்சுவை தொலைக்காட்சி தொடருக்கான வகைப்பாட்டில் சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருதை பெறும் முதல் ஆசிய நடிகர் இவரே ஆவார்.
  • சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருது “திஸ் இஸ் அஸ்“ (This Is us) எனும் தொலைக்காட்சித் தொடரின் நடிகரான பிரவுனிற்கு (Brown) வழங்கப்பட்டுள்ளது.
  • சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருதைப் பெறும் முதல் ஆப்ரோ-அமெரிக்கர் இவரேயாவார்.
  • முன்சென்ற ஆண்டின் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளின் சிறந்த இயக்கத் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்கு ஹாலிவுட் வெளிநாட்டு பத்திரிகை சங்கத்தால் வழங்கப்படும் வருடாந்திர விருதுகளே புகழ் பெற்ற கோல்டன் குளோப் விருதுகளாகும்.
  • 1944 ஆம் ஆண்டிலிருந்து இவ்விருது வழங்கப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்