76வது உலக சுகாதாரச் சபையானது, சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வின் கருத்துரு: "75 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு : உயிர்களைக் காப்பாற்றுதல், அனைவருக்குமான ஆரோக்கிய நலனைக் கொண்டு சேர்த்தல்" என்பது ஆகும்.
அனைத்து உறுப்பினர் நாடுகளின் பிரதிநிதிகளும் ஒன்று கூடி, உலகெங்கிலும் உள்ள மக்களைப் பாதிக்கும், நெருக்கடி நிலையை உண்டாக்கச் செய்கின்ற பல சுகாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்து விவாதிப்பதற்கான ஒரு தளமாக இது செயல்படும்.