1949 ஆம் ஆண்டில் இந்த நாளில் தான், பீல்ட் மார்ஷல் கரியப்பா, ஜெனரல் சர் FRR புச்சரை அடுத்து இந்திய இராணுவத்தின் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்றார்.
இந்த நாள் ஆனது சவாலானச் சூழ்நிலைகளில் தொடர்ந்து பணியாற்றிய இந்திய இராணுவ வீரர்களின் தைரியம், வீரம் மற்றும் தியாகத்தினை நினைவு கூர்கிறது.
77வது இராணுவ தின அணிவகுப்பில் 52 மதிப்புமிக்க விருதுகள் வழங்கப் பட்டன.
இதில் 8 மரணத்திற்குப் பிந்தைய விருதுகள் உள்ளிட்ட 15 சேனா பதக்கங்கள் (வீர தீர விருதுகள்) மற்றும் 37 இராணுவத் தலைமைத் தளபதி (COAS) பிரிவு விருதுகள் ஆகியன அடங்கும்.