உலக சுகாதார அமைப்பின் 77வது உலக சுகாதார மாநாடானது சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்றது.
மனித செல்கள் மற்றும் திசுக்கள் உள்ளிட்ட உறுப்பு மாற்றுச் சிகிச்சை கிடைக்கப் பெறுவதை மேம்படுத்துவதற்கான வரைவுத் தீர்மானத்திற்கு இது ஒப்புதல் அளித்து உள்ளது.
இந்தத் தீர்மானமானது 2026 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப் படுவதற்காக முன் வைக்கப் படுவதற்கான பல்வேறு உலகளாவிய உத்திகளை உருவாக்கும் பணியை நாடுகளுக்கு வழங்கியுள்ளது.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் உறுப்பு தானங்களை வழங்குவதற்காக உலக உறுப்பு தான தினத்தினை நிறுவுவதற்கும் இது ஊக்குவித்தது.
2013 ஆம் ஆண்டில் 4,990 ஆக இருந்த உறுப்பு தானம் ஆனது 2022 ஆம் ஆண்டில் 16,041 ஆக அதிகரித்துள்ளது.