இந்த ஆண்டு, இந்தியா தனது 78வது சுதந்திர தினம் அல்லது சுதந்திரத் திவாஸ் தினத்தினைக் கொண்டாடியது.
இந்திய அரசாங்கம் ஆனது இந்த ஆண்டிற்கான கருத்துருவாக விக்சித் பாரத்@2047 அல்லது 2024 ஆம் ஆண்டில் வளர்ச்சி பெற்ற இந்தியா என்று அறிவித்தது.
பிரதமர் அவர்கள் தொடர்ந்து 11வது முறையாக செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி ஆகியோருக்குப் பிறகு அவ்வாறு தொடர்ந்து உரையாற்றிய மூன்றாவது பிரதமர் என்ற பெருமையினை இவர் பெற்று உள்ளார்.
2024 ஆம் ஆண்டு பிரதமரின் 98 நிமிட சுதந்திர தின உரை அவரது நீண்ட நேர சுதந்திர தின உரையாகும்.
இவருக்கு முன்னதாக, 1947 ஆம் ஆண்டில் ஜவஹர்லால் நேரு அவர்களும், 1997 ஆம் ஆண்டில் I.K.குஜ்ரால் அவர்களும் முறையே 72 மற்றும் 71 நிமிடங்களிலான நீண்ட நேர உரைகளை நிகழ்த்தியுள்ளனர்.
நேரு மற்றும் இந்திரா ஆகியோர் முறையே 1954 மற்றும் 1966 ஆம் ஆண்டுகளில் 14 நிமிடக் கணக்கில் மிகக் குறுகிய நேர உரைகளையும் நிகழ்த்தியுள்ளனர்.
பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 400 பெண் பிரதிநிதிகள் டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டனர்.