TNPSC Thervupettagam
January 10 , 2022 926 days 547 0
  • டெல்லியில் உள்ள தடய அறிவியல் ஆய்வகம் - தடயவியல் சேவை அமைப்பானது 2021 ஆம் ஆண்டிற்கான SKOCH விருதினை (வெள்ளி) வென்றுள்ளது.
  • குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் வன்முறைகள் போன்றவற்றை எதிர்த்துப் போராடியதற்காக ஆளுகைப் பிரிவில் இந்த அமைப்பானது அந்த விருதைப் பெற்றது.
  • 2022 ஆம் ஆண்டு ஜனவரி 06 அன்று நடைபெற்ற 78வது SKOCH உச்சி மாநாட்டின் போது இந்த விருதானது வழங்கப்பட்டது.
  • இந்த உச்சி மாநாடானது, "ஆளுகை  நிலை" என்ற கருத்துருவுடன்  ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
  • 2003 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த SKOCH விருது இந்தியாவின் ஒரு உயரிய குடிமை விருது ஆகும்.
  • சிறந்த இந்தியாவைக் கட்டியெழுப்புவதற்காக உழைக்கும் மக்கள், திட்டங்கள் மற்றும் நிறுவனங்களை அங்கீகரிக்கச் செய்வதற்காக வேண்டி ஒரு தன்னார்வ அமைப்பால் இது வழங்கப் படுகின்றது.
  • புனே சர்வதேச மையத்தின் முன்னணி உறுப்பினர்களால் எழுதப்பட்ட ‘Rising to the China Challenge: Winning Through Strategic Patience and Flexible Policies' என்ற புத்தகத்திற்கு 2021 ஆம் ஆண்டிற்கான  SKOCH  இலக்கிய விருதானது வழங்கப் பட்டது.
  • இந்தப் புத்தகமானது ரூபா பப்ளிகேஷன்ஸ் இந்தியா லிமிடெட் பதிப்பகத்தினால் 2021 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
  • சீனாவின் தூண்டுதலால் 2020 ஆம் ஆண்டில் நடைபெற்ற கல்வான் பள்ளத்தாக்கு மோதலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் புத்தகமானது எழுதப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்