1946 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதியன்று, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை மற்றும் லுட்விக் ராஜ்ச்மன் ஆகியோர் இணைந்து UNICEF அமைப்பினை நிறுவினர்.
இரண்டாம் உலகப் போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் உள்ள குழந்தைகளின் பல்வேறு தேவைகளை நன்கு நிவர்த்தி செய்வதையும், போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு அவசர உதவி வழங்குவதையும் இது முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தது.
அதன் செயல்பாடுகள் ஆனது, வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள குழந்தைகள் மற்றும் பெண்களின் நீண்ட காலத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக 1950 ஆம் ஆண்டில் நீட்டிக்கப்பட்டன.
1953 ஆம் ஆண்டில், இது ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிரந்தர உறுப்பினராக ஆனது.