TNPSC Thervupettagam

78வது சுதந்திர தினம்

August 17 , 2024 101 days 143 0
  • இந்த ஆண்டு, இந்தியா தனது 78வது சுதந்திர தினம் அல்லது சுதந்திரத் திவாஸ் தினத்தினைக் கொண்டாடியது.
  • இந்திய அரசாங்கம் ஆனது இந்த ஆண்டிற்கான கருத்துருவாக விக்சித் பாரத்@2047 அல்லது 2024 ஆம் ஆண்டில் வளர்ச்சி பெற்ற இந்தியா என்று அறிவித்தது.
  • பிரதமர் அவர்கள் தொடர்ந்து 11வது முறையாக செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
  • ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி ஆகியோருக்குப் பிறகு அவ்வாறு தொடர்ந்து உரையாற்றிய மூன்றாவது பிரதமர் என்ற பெருமையினை இவர் பெற்று உள்ளார்.
  • 2024 ஆம் ஆண்டு பிரதமரின் 98 நிமிட சுதந்திர தின உரை அவரது நீண்ட நேர சுதந்திர தின உரையாகும்.
  • இவருக்கு முன்னதாக, 1947 ஆம் ஆண்டில் ஜவஹர்லால் நேரு அவர்களும், 1997 ஆம் ஆண்டில் I.K.குஜ்ரால் அவர்களும் முறையே 72 மற்றும் 71 நிமிடங்களிலான நீண்ட நேர உரைகளை நிகழ்த்தியுள்ளனர்.
  • நேரு மற்றும் இந்திரா ஆகியோர் முறையே 1954 மற்றும் 1966 ஆம் ஆண்டுகளில் 14 நிமிடக் கணக்கில் மிகக் குறுகிய நேர உரைகளையும் நிகழ்த்தியுள்ளனர்.
  • பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 400 பெண் பிரதிநிதிகள் டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்