TNPSC Thervupettagam

7வது ஆயுதப்படை வீரர்கள் தினம் - ஜனவரி 14

January 17 , 2023 585 days 192 0
  • இந்திய நாட்டின் ஆயுதப் படைகளில் பணியாற்றிய வீரர்களின் தியாகம் மற்றும் சேவையைக் கௌரவிப்பதற்காக இந்தத் தினமானது அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
  • இந்தத் தினமானது 2017 ஆம் ஆண்டில் கொண்டாடப்படத் தொடங்கியது.
  • இந்தத் தினமானது, நவம்பர் 11 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் போர் நிறுத்த தினத்தில் இருந்து உருவானதாக அறியப்படுகிறது.
  • முதல் போர் நிறுத்த தினமானது 1919 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதியன்று அனுசரிக்கப் பட்டது.
  • இது முதலாம் உலகப் போரின் முடிவை நினைவு கூருவதையும், அப்போரில் போராடிய துணிச்சலான வீரர்களைக் கௌரவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தியாவில், 1926 ஆம் ஆண்டில் காங்கிரஸால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் இந்தத் தினமானது முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது.
  • போர் நிறுத்த நாளானது 2017 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஆயுதப்படை வீரர்கள் தினம் என மறுபெயரிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்