இந்திய ஆற்றல் மாநாட்டின் (Indian Energy Congress) ஏழாவது பதிப்பு அண்மையில் புது தில்லியில் நடைபெற்றது.
இந்த மாநாட்டின் கருத்துரு – “ஆற்றல்0 – 2030 நோக்கிய ஆற்றல் மாற்றம்” (Energy 4.0 – Energy Transition towards 2030)
இந்திய உலக ஆற்றல் குழு (World Energy Council India) மற்றும் மின், நிலக்கரி, புது மற்றும் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, வெளியுறவுத் துறை, அணுசக்தி துறை போன்ற மத்திய அமைச்சகங்களின் கூட்டிணைவால் இந்த வருடாந்திர மாநாடு நடத்தப்படுகின்றது.
ஆற்றல் தொழிற்துறையில் உள்ள தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்கள் மற்றும் கொள்கை முடிவெடுப்பாளர்கள் தங்களுடைய அனுபவம், ஆற்றல் துறைசார் அறிவு, நிபுணத்துவம் போன்றவற்றை பகிர்ந்து கொள்வதற்கு தேவையான தனித்துவ மேடையை உருவாக்கித் தருவதே இந்த சர்வதேச ஆற்றல் மாநாட்டின் நோக்கமாகும்.