2018 ஆம் ஆண்டின் 7வது உலக கூட்டுறவிற்கான கண்காணிப்பு அறிக்கையின்படி உலகின் மிகப்பெரிய கூட்டுறவுச் சங்கமாக இந்தியாவின் மிகப்பெரிய உரத் தயாரிப்புத் தொழிற்சாலையான இப்கோ (IFFCO) என்ற நிறுவனம் இடம் பெற்றிருக்கின்றது.
2016 ஆம் ஆண்டிலிருந்து இந்நிறுவனம் இவ்விடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கின்றது.
இந்த அறிக்கை சர்வதேசக் கூட்டுறவிற்கான கூட்டணி (The International Cooperative Alliance - ICA), கூட்டுறவு மற்றும் சமூக நிறுவனங்கள் மீதான ஐரோப்பிய ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றால் வெளியிடப்பட்டது.
இப்கோ நிறுவனம் அதனது விற்றுமுதல் மதிப்பு தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்போடு ஒப்பிடப்பட்டு அதன் அடிப்படையில் தரப்படுத்தப்பட்டிருக்கின்றது.
விவசாயம் மற்றும் உணவுத் துறை தொழிற்சாலைப் பிரிவில் உலகின் முதல் 20 கூட்டுறவுச் சங்கங்களில் இப்கோ நிறுவனம் முதலிடம் பிடித்திருக்கின்றது.