போஷன் பக்வாடா என்பது ஊட்டச்சத்துக் குறைபாட்டை நன்கு எதிர்த்துப் போராடச் செய்வதையும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நன்கு மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட நாடு தழுவிய பிரச்சாரமாகும்.
இது போஷன் அபியான் என்ற முன்னெடுப்பின் கீழ் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பிரச்சாரத்தில் நான்கு முக்கியக் கருப்பொருள்களில் கவனம் செலுத்தப் படுகிறது.
இது போஷன் டிராக்கரின் பயனாளி மாதிரியினை பிரபலப்படுத்துவதையும், மிகவும் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டின் சமூக அடிப்படையிலான மேலாண்மை (CMAM) அணுகுமுறையின் மூலம் ஊட்டச்சத்துக் குறைபாட்டை நிர்வகிப்பதையும் ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தப் பிரச்சாரம் ஆனது, இந்தியா முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்த முயல்கிறது.