TNPSC Thervupettagam

7வது வருடாந்திரத் தொழிலாளர் வளக் கணக்கெடுப்பு (PLFS)

October 1 , 2024 2 days 53 0
  • தேசியப் புள்ளியியல் அலுவலகம் (NSO) ஆனது, வருடாந்திரத் தொழிலாளர் வளக் கணக்கெடுப்பு (PLFS) 2023-24 முடிவுகளை வெளியிட்டுள்ளது.
  • 2022-23 ஆம் ஆண்டில் இருந்ததைப் போலவே, 2023-24 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்பின்மை விகிதம் 3.2% ஆக மாறாமல் இருந்தது.
  • 2017-18 ஆம் ஆண்டு முதல், வேலைவாய்ப்பின்மை விகிதத்தில் வருடாந்திரச் சரிவு பதிவாகவில்லை.
  • தேசிய அளவில் 2022-23 ஆம் ஆண்டில் 57.9% ஆக இருந்த தொழிலாளர் வளப் பங்கேற்பு விகிதம் (LFPR) ஆனது 2023-24 ஆம் ஆண்டில் 60.1% ஆக அதிகரித்துள்ளது.
  • கிராமப்புற LFPR ஆனது 63.7% ஆகவும், நகர்ப்புற LFPR ஆனது 52% ஆகவும் உயர்ந்து உள்ளது.
  • 2023-2024 ஆம் ஆண்டில் தொழிலாளர் மக்கள் தொகை விகிதத்தில் (WPR) பதிவான அதிகரிக்கும் போக்கு 58.2% ஆக இருந்தது.
  • ஆண் மற்றும் பெண்கள் மத்தியில் இந்த விகிதம் முறையே 76.3% மற்றும் 40.3% ஆகும்.
  • 2022-23 ஆம் ஆண்டில் சுமார் 2.4% ஆக இருந்த கிராமப்புறங்களில் பதிவான வேலை வாய்ப்பின்மை விகிதம் ஆனது 2023-24 ஆம் ஆண்டில் 2.5% ஆக உயர்ந்துள்ளது.
  • ஆனால் 5.4% ஆக இருந்த நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை விகிதம் ஆனது 5.1% ஆக முன்னேறியுள்ளது .
  • 2022-23 ஆம் ஆண்டில் சுமார் 2.9% ஆக இருந்த பெண்களுக்கான வேலைவாய்ப்பின்மை விகிதம் ஆனது 3.2% ஆக உயர்ந்துள்ளது.
  • 3.3% ஆக இருந்த ஆண்களுக்கான வேலைவாய்ப்பின்மை விகிதம் ஆனது 3.2% ஆகக் குறைந்துள்ளது.
  • 2022-23 ஆம் ஆண்டில் 57.3% ஆக இருந்த சிறு தொழில்கள் உள்ளிட்ட சுயதொழில்களில் ஈடுபடுபவர்களின் பங்கு 58.4% ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்