அமெரிக்க வர்த்தக மன்றத்தின் உலகளாவிய புத்தாக்கக் கொள்கை மையமானது (Global Innovation Policy Center - GIPC) 2020 ஆம் ஆண்டிற்கான சர்வதேச அறிவுசார் சொத்துக் (Intellectual Property - IP) குறியீட்டின் 8வது பதிப்பை வெளியிட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டானது குறியீடானது கிரீஸ், டொமினிகன் குடியரசு மற்றும் குவைத் ஆகிய மூன்று புதிய பொருளாதார நாடுகளை உள்ளடக்கிய 53 உலகளாவிய பொருளாதார நாடுகளின் பொருளாதார சூழலை ஆராய்ந்துள்ளது.
2019 ஆம் ஆண்டில் மொத்தமுள்ள 50 நாடுகளில் இந்தியா 36வது இடத்தில் தரப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு இந்தியாவின் நிலையானது 40வது இடத்திற்கு தரமிறக்கப்பட்டுள்ளது.
இந்தக் குறியீட்டில் அமெரிக்கா முதலிடத்திலும் இங்கிலாந்து, சுவீடன், பிரான்சு மற்றும் ஜெர்மனி ஆகியவை அதற்கு அடுத்த இடங்களிலும் தரப்படுத்தப் பட்டுள்ளன.
இந்தக் குறியீட்டில் ஆசியாவில், இந்தியா 4வது இடத்தில் உள்ளது. இந்தக் குறியீட்டில் ஆசியாவில் ஆஸ்திரேலியா முதலிடத்திலும் புருனே இரண்டாவது இடத்திலும் மற்றும் சீனா மூன்றாவது இடத்திலும் தரவரிசைப்படுத்தப் பட்டுள்ளன.
இந்தக் குறியீட்டில் கீழ் - நடுத்தர வருமான கொண்ட பொருளாதார நாடுகளில், எகிப்து முதலிடத்திலும் இந்தியா 2வது இடத்திலும் உள்ளன.