TNPSC Thervupettagam

8வது மற்றும் 9வது சமூக வானொலி விருதுகள்

July 26 , 2023 342 days 250 0
  • மத்தியத் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஆனது புது டெல்லியில் நடைபெற்ற பிராந்தியச் சமூக வானொலி சம்மேளனத்தின் போது இந்த விருதுகளை வழங்கியது.
  • பின்வரும் 4 பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
    • கருத்துரு சார்ந்த விருதுகள்
    • மிகவும் புத்தாக்கமிக்க சமூக ஈடுபாடு விருதுகள்
    • உள்ளூர்க் கலாச்சாரத்தினை ஊக்குவித்தலுக்கான விருதுகள்
    • நிலைத் தன்மை மிக்க நவீன விருதுகள்
  • தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில் இயக்கப்படும் வயலக வானொலி, நிலைத் தன்மை மிக்க நவீன விருதுகள் பிரிவில் இரண்டாம் பரிசு பெற்றது.
  • இந்த விருதுகள் சமூக ஒளிபரப்பு மற்றும் உள்ளூர் மேம்பாட்டிற்கான சிறந்தப் பங்களிப்புகளை அங்கீகரிக்கிறன.
  • ஒலிபரப்பில் மூன்றாம் நிலையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சமூக வானொலி ஆனது, சமூகங்களுக்கு அதிகாரம் அளித்து கலாச்சாரப் பாரம்பரியத்தை மிகவும் நன்கு பாதுகாக்கிறது.
  • சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புடன், இந்தியாவில் தற்போது 449 சமூக வானொலி நிலையங்கள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்