TNPSC Thervupettagam

8 மருத்துவ உபகரணங்கள் மருந்துப் பொருட்களாக அறிவிக்கப்படுதல்

February 11 , 2019 2269 days 1344 0
  • 2020ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல், மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத் திருத்த பிரிவு 3ன் கீழ் அனைத்துப் பொருத்தப்படக்கூடிய கருவிகள் உட்பட 8 மருத்துவ உபகரணங்களை மத்திய சுகாதார அமைச்சகம் மருந்துப் பொருட்களாக அறிவித்து இருக்கின்றது.
  • இந்த மருத்துவ உபகரணங்கள் பின்வருமாறு
    • அனைத்துப் பொருத்தப்படக்கூடிய மருத்துவ உபகரணங்கள்
    • சிடி ஸ்கேன்
    • எம்.ஆர்.ஐ கருவி
    • உதறல் நீக்கு இயந்திரம்
    • டயாலிசிஸ் உபகரணம்
    • PET இயந்திரம்
    • எக்ஸ்ரே இயந்திரம்
    • எலும்பு மஜ்ஜை செல் பிரிப்பு இயந்திரம்
  • தேசிய மருத்துவ உபகரணங்களுக்கான ஒழுங்குமுறை ஆணையமான மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் (The Central Drugs Standard Control Organisation - CDSCO), மருத்துவ உபகரணங்களின் பயன்பாடு மற்றும் விற்பனையை ஒழுங்குபடுத்தும் ஒரு வழிமுறையை உருவாக்கிட பணிபுரிந்துக் கொண்டிருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்