8 வது இந்தோ - செசெல்ஸ் இராணுவ கூட்டுப்போர் பயிற்சி (February 24-March 4)
March 1 , 2018 2463 days 736 0
இந்திய இராணுவம் மற்றும் செசெல்ஸ் நாட்டு மக்கள் பாதுகாப்புப் படைக்கு இடையேயான 8-வது இராணுவ கூட்டுப்போர் பயிற்சி செசெல்ஸ் (Seychelles) நாட்டின் மாஹே தீவில் நடைபெற்று வருகின்றது.
கிளர்ச்சித்தடுப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு மீதான இந்தியா மற்றும் செசெல்ஸ் நாட்டிற்கிடையேயான இந்தக் கூட்டுப்போர் பயிற்சியின் பெயர் “லமிட்யே” (Lamitye) ஆகும். இதன் பொருள் நட்புறவு (Friendship) என்பதாகும்.
2001 ஆம் ஆண்டிலிருந்து இந்தியா மற்றும் செசெல்ஸ் நாட்டிற்கிடையே இந்த இருதரப்புக் கூட்டுப்போர் பயிற்சி நடத்தப்பட்டு வருகின்றது.
இரு வருடங்களுக்கு ஒருமுறை (Biennial) நடத்தப்படும் இக்கூட்டுப் போர் பயிற்சியின் நோக்கம் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கிளர்ச்சித் தடுப்பு நடவடிக்கைகளில் இரு நாடுகளுக்கிடையேயான இராணுவ ஒத்துழைப்பு மற்றும் இணைந்து செயலாற்றும் தன்மையை (Interoperability) மேம்படுத்துவதாகும்.
ஐ.நா. சாசனத்திற்கு உட்பட்டு பகுதி-நகர்ப்புற (Semi-urban) சூழலில் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கிளர்ச்சித் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தற்போது இந்தக் கூட்டுப்போர் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.