TNPSC Thervupettagam

8-வது தெற்காசிய ஜீடோ சாம்பியன்ஷிப்

April 25 , 2018 2439 days 800 0
  • நேபாள நாட்டின் தலைநகரான காத்மண்டுவில் நடைபெற்ற தெற்காசிய ஜீடோ சாம்பியன்ஷிப் போட்டியின் (South Asian Judo Championship) 8-வது தொடரில் அணிகளுக்கான சாம்பியன்ஷிப் பட்டத்தை (team champion title) இந்தியா    வென்றுள்ளது.
  • இந்த தெற்காசிய ஜீடோ சாம்பியன்ஷிப் போட்டியின் 8-வது தொடரில் ஆண்களுக்கான ஜீடோ அணிப் பிரிவில் இந்திய ஜீடோ அணியானது பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
  • பெண்களுக்கான ஜீடோ அணிப் பிரிவில் நேபாளத்தை வீழ்த்தி இந்தியா பெண்கள் ஜூடோ அணி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது.­­
  • 12 தங்கம் மற்றும் மூன்று வெண்கலம்  என மொத்தம் 15 பதக்கங்களை வென்று   பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்து இப்போட்டியை இந்தியா நிறைவு செய்துள்ளது.
  • இரு தங்கம், ஏழு வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 22 பதக்கங்கள் வென்று பதக்கப்பட்டியலில் நேபாளம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
  • இரு தங்கம், 4 வெள்ளி, மூன்று வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் பாகிஸ்தான் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
  • தெற்காசிய ஜீடோ சம்மேளனத்தினுடைய (South Asian Judo Federation) சந்திப்பில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தெற்காசிய ஜீடோ சாம்பியன் ஷிப் போட்டியின் 9வது பதிப்பு  2020 ஆம் ஆண்டு வங்க தேசத்தில் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்