நேபாள நாட்டின் தலைநகரான காத்மண்டுவில் நடைபெற்ற தெற்காசிய ஜீடோ சாம்பியன்ஷிப் போட்டியின் (South Asian Judo Championship) 8-வது தொடரில் அணிகளுக்கான சாம்பியன்ஷிப் பட்டத்தை (team champion title) இந்தியா வென்றுள்ளது.
இந்த தெற்காசிய ஜீடோ சாம்பியன்ஷிப் போட்டியின் 8-வது தொடரில் ஆண்களுக்கான ஜீடோ அணிப் பிரிவில் இந்திய ஜீடோ அணியானது பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
பெண்களுக்கான ஜீடோ அணிப் பிரிவில் நேபாளத்தை வீழ்த்தி இந்தியா பெண்கள் ஜூடோ அணி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது.
12 தங்கம் மற்றும் மூன்று வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்து இப்போட்டியை இந்தியா நிறைவு செய்துள்ளது.
இரு தங்கம், ஏழு வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 22 பதக்கங்கள் வென்று பதக்கப்பட்டியலில் நேபாளம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இரு தங்கம், 4 வெள்ளி, மூன்று வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் பாகிஸ்தான் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
தெற்காசிய ஜீடோ சம்மேளனத்தினுடைய (South Asian Judo Federation) சந்திப்பில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தெற்காசிய ஜீடோ சாம்பியன் ஷிப் போட்டியின் 9வது பதிப்பு 2020 ஆம் ஆண்டு வங்க தேசத்தில் நடைபெற உள்ளது.