இந்தியா மற்றும் பூடான் ஆகிய இருநாடுகளுக்கிடையேயான ராஜ்ஜிய ரீதியிலான உறவுகளை முறைப்படுத்தியதற்கான 50 வருடங்களைக் குறிப்பிடும் வகையில் புதுதில்லியில் 8-வது நூற்றாண்டில் வசித்த இமாலயத் துறவியான குரு பத்மசம்பவா மீதான இரண்டு நாள் சர்வதேச மாநாடு நடத்தப்பட்டது.
இம்மாநாடு அமைதியை மேம்படுத்துவதற்கான மையத்தால் குரு பத்மசம்பவாவின் வாழ்க்கை மற்றும் மரபு என்ற பெயரில் நடத்தப்பட்டது.
இரு நாடுகளைச் சேர்ந்த அறிஞர்களும் இதில் பங்கேற்று, 8வது நூற்றாண்டில் இந்தியாவில் பிறந்து புத்தமதத்தையும், புத்தமதக் கோட்பாடுகளையும் இமாலயப் பகுதி முழுவதும் பரப்புவதற்காக பூடானிற்கு இடம்பெயர்ந்த துறவி பற்றிய கருத்துக்களை அதில் விவாதித்தனர்.