எஃகு அமைச்சகத்தின் கீழ் செயல்படும், தேசியக் கனிமவள மேம்பாட்டுக் கழகமானது (NMDC - National Mineral Development Corporation), 80வது SKOCH உச்சி மாநாடு மற்றும் SKOCH விருது விழாவில் ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்றது.
இதற்கான நிகழ்ச்சி சமீபத்தில் புதுதில்லியில் நடத்தப் பட்டது.
SKOCH உச்சி மாநாட்டின் கருப்பொருள் 'வங்கிகள், நிதிச் சேவைகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் & பொதுத் துறை நிறுவனங்களின் நிலை' என்பதாகும்.
தேசியக் கனிமவள மேம்பாட்டு கழகத்தின் சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள பன்சி இந்தியத் தொழில்துறைப் பயிற்சி நிறுவனம் மூலம் தொழில்நுட்பக் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டினை ஊக்குவித்தல் திட்டமானது சமூகப் பொறுப்பு பிரிவில் தங்கப் பதக்கத்தினைப் பெற்றது.
பெருநிறுவன மூல வளங்களின் திட்டமிடலைச் செயல்படுத்தலுக்கான ஒரு திட்டமான ‘கல்பதரு’ என்ற ஒரு திட்டமானது, எண்ணிம (டிஜிட்டல்) உள்ளடக்கம் என்ற பிரிவில் வெள்ளி பதக்கத்தினைப் பெற்றது.