TNPSC Thervupettagam
April 16 , 2022 829 days 447 0
  • எஃகு அமைச்சகத்தின் கீழ் செயல்படும், தேசியக் கனிமவள மேம்பாட்டுக் கழகமானது (NMDC - National Mineral Development Corporation), 80வது SKOCH உச்சி மாநாடு மற்றும் SKOCH விருது விழாவில் ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்றது.
  • இதற்கான நிகழ்ச்சி சமீபத்தில் புதுதில்லியில் நடத்தப் பட்டது.
  • SKOCH உச்சி மாநாட்டின் கருப்பொருள் 'வங்கிகள், நிதிச் சேவைகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் & பொதுத் துறை நிறுவனங்களின் நிலை' என்பதாகும்.
  • தேசியக் கனிமவள மேம்பாட்டு கழகத்தின் சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள பன்சி இந்தியத் தொழில்துறைப் பயிற்சி நிறுவனம் மூலம் தொழில்நுட்பக் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டினை ஊக்குவித்தல் திட்டமானது சமூகப் பொறுப்பு பிரிவில் தங்கப் பதக்கத்தினைப் பெற்றது.
  • பெருநிறுவன மூல வளங்களின் திட்டமிடலைச் செயல்படுத்தலுக்கான ஒரு திட்டமான ‘கல்பதரு’ என்ற ஒரு திட்டமானது, எண்ணிம (டிஜிட்டல்) உள்ளடக்கம் என்ற பிரிவில் வெள்ளி பதக்கத்தினைப் பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்