பாதுகாப்புத் துறைக் கொள்முதல் ஆணையமானது (DAC - Defense Acquisition Council) இந்திய வான் படைக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 83 தேஜாஸ் வகை போர் விமானங்களை வாங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இலகு ரகப் போர் விமானமான (LCA - Light Combat Aircraft) தேஜாஸ் ஆனது விமான வளர்ச்சி ஆணையத்தினால் (ADA - Aircraft Development Agency) வடிவமைக்கப் பட்டுள்ளது.
ADA ஆனது பாதுகாப்பு ஆராய்ச்சி வளர்ச்சி அமைப்பின் கீழ் செயல்படுகின்றது.
இது இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப் பட்டுள்ளது.
DAC ஆனது மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றது. இது ஒரு உயரிய முடிவு எடுக்கும் அமைப்பாகும்.
இது 1999 ஆம் ஆண்டில் நிகழ்ந்த கார்கில் போரிற்குப் பின்பு 2001 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப் பட்டது.