சர்வதேச அணுசக்தி முகமையானது, ஈரானின் ஃபோர்டோ என்ற நிலத்தடி அணு சக்தித் தளத்தில் 83.7 சதவீதம் வரை செறிவு கொண்ட யுரேனியம் மூலக்கூறுகளைக் கண்டுபிடித்துள்ளது.
ஆனால் ஈரான் நாட்டில் 69 சதவீதத்திற்கு மேல் செறிவு கொண்ட யுரேனிய இருப்புகள் இல்லை.
ஈரானின் 2015 ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் ஆனது தெஹ்ரானின் யுரேனியம் இருப்பு அளவினை 300 கிலோகிராம் (661 பவுண்டுகள்) ஆகவும் அதற்கான செறிவு வரம்பினை 3.67% ஆகவும் வரையறுத்துள்ளது.
3.67% செறிவு கொண்ட யுரேனியமானது அணுமின் நிலையத்திற்கு எரிபொருளாகப் பயன்படுத்தப் படுவதற்குப் போதுமானதாகும்.
2018 ஆம் ஆண்டில் இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா ஒருதலைப் பட்சமாக விலகியதால், தனது அணுசக்தித் திட்டத்தின் மீது தெஹ்ரான் தொடர்ச்சியான மாற்றங்கள் மற்றும் விரிவாக்கங்களை மேற்கொண்டது.