TNPSC Thervupettagam

83.7 சதவிகிதம் செறிவுமிக்க யுரேனியம்

March 5 , 2023 505 days 232 0
  • சர்வதேச அணுசக்தி முகமையானது, ஈரானின் ஃபோர்டோ என்ற நிலத்தடி அணு சக்தித் தளத்தில் 83.7 சதவீதம் வரை செறிவு கொண்ட யுரேனியம் மூலக்கூறுகளைக் கண்டுபிடித்துள்ளது.
  • ஆனால் ஈரான் நாட்டில் 69 சதவீதத்திற்கு மேல் செறிவு கொண்ட யுரேனிய இருப்புகள் இல்லை.
  • ஈரானின் 2015 ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் ஆனது தெஹ்ரானின் யுரேனியம் இருப்பு அளவினை 300 கிலோகிராம் (661 பவுண்டுகள்) ஆகவும் அதற்கான செறிவு வரம்பினை 3.67% ஆகவும் வரையறுத்துள்ளது.
  • 3.67% செறிவு கொண்ட யுரேனியமானது அணுமின் நிலையத்திற்கு எரிபொருளாகப் பயன்படுத்தப் படுவதற்குப் போதுமானதாகும்.
  • 2018 ஆம் ஆண்டில் இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா ஒருதலைப் பட்சமாக விலகியதால், தனது அணுசக்தித் திட்டத்தின் மீது தெஹ்ரான் தொடர்ச்சியான மாற்றங்கள் மற்றும் விரிவாக்கங்களை மேற்கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்