TNPSC Thervupettagam

88-வது மஹாமஸ்தகபிஷேகா திருவிழா

February 8 , 2018 2512 days 836 0
  • கர்நாடகா மாநிலத்தின் சரவணபெலகோலாவில் பாகுபலி தெய்வத்தின் ஒற்றைக் கல் சிலைக்கான (Monolithic Statue) 88-வது மஹாமஸ்தகபிஷகா திருவிழா தொடங்கியுள்ளது.
திருவிழாவைப் பற்றி
  • மஹாமஸ்தகபிஷேகா திருவிழாவானது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகின்றது.
  • சமண சமூகத்தவரின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றாக இது சமண சமயத்தின் முக்கிய அடையாளமான பாகுபலி தெய்வத்தை கௌரவிப்பதற்காக நடத்தப்படுகின்றது.
  • சமண சமய நூல்களின் படி பாகுபலி கைலாய மலையில் இறப்பு மற்றும் பிறப்பு சுழற்சியிலிருந்து விடுபட்டு மோட்சத்தை அடைந்தார்.
  • கோமதேஷ்வரா சிலையானது இவருக்கு அர்ப்பணிக்கப்பட்டதால் இவர் கோமதேஷ்வரா என்றும் அழைக்கப்படுகின்றார்.
  • கோமதேஸ்வரர் சிலையானது கங்கா வம்சத்தின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. 57 அடி உயர ஒற்றைக் கல் சிற்பமான இது கர்நாடக மாநிலத்தின் ஹசன் மாவட்டத்தின் சரவணபெலகோலாவின் மலைகளில் உள்ளது.
  • இது உலகின் மிகப்பெரிய தனித்து நிற்கின்ற (Free-Standing Statue) சிலைகளில் ஒன்றாகும்.
   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்