கர்நாடகா மாநிலத்தின் சரவணபெலகோலாவில் பாகுபலி தெய்வத்தின் ஒற்றைக் கல் சிலைக்கான (Monolithic Statue) 88-வது மஹாமஸ்தகபிஷகா திருவிழா தொடங்கியுள்ளது.
திருவிழாவைப் பற்றி
மஹாமஸ்தகபிஷேகா திருவிழாவானது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகின்றது.
சமண சமூகத்தவரின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றாக இது சமண சமயத்தின் முக்கிய அடையாளமான பாகுபலி தெய்வத்தை கௌரவிப்பதற்காக நடத்தப்படுகின்றது.
சமண சமய நூல்களின் படி பாகுபலி கைலாய மலையில் இறப்பு மற்றும் பிறப்பு சுழற்சியிலிருந்து விடுபட்டு மோட்சத்தை அடைந்தார்.
கோமதேஷ்வரா சிலையானது இவருக்கு அர்ப்பணிக்கப்பட்டதால் இவர் கோமதேஷ்வரா என்றும் அழைக்கப்படுகின்றார்.
கோமதேஸ்வரர் சிலையானது கங்கா வம்சத்தின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. 57 அடி உயர ஒற்றைக் கல் சிற்பமான இது கர்நாடக மாநிலத்தின் ஹசன் மாவட்டத்தின் சரவணபெலகோலாவின் மலைகளில் உள்ளது.
இது உலகின் மிகப்பெரிய தனித்து நிற்கின்ற (Free-Standing Statue) சிலைகளில் ஒன்றாகும்.