புது டெல்லியில் 8வது தேசிய இயற்கை முறையிலான உற்பத்தித் திட்ட நிகழ்ச்சி ஆனது நடத்தப் பட்டது.
அடுத்த மூன்று ஆண்டுகளில் இயற்கை வேளாண் ஏற்றுமதியானது 20,000 கோடி ரூபாயை எட்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த நிகழ்வின் போது வேளாண் உற்பத்திக்கு உதவும் வகையில் புதிய இணைய தளங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன:
NPOP இணைய தளம்: இயற்கை வேளாண்மைப் பங்குதாரர்களுக்கு மிக அதிக தெரிவு நிலையை வழங்குவதோடு, அதற்கான செயல்பாடுகளை எளிதாக்கும்.
இயற்கை வேளாண்மை ஊக்குவிப்பு இணைய தளம்: விவசாயிகள், விவசாயிகள் உற்பத்தி அமைப்புகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் தங்கள் சான்றளிக்கப்பட்ட இயற்கை வேளாண் பொருட்களை இங்குக் காட்சிப்படுத்தி, வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கி உலகளாவிய வாங்கும் நிறுவனங்களுடன் தொடர்பினை ஏற்படுத்தலாம்.
TraceNet 2.0: தடையற்றச் செயல்பாடுகளுக்கான மேம்படுத்தப்பட்ட இயங்கலை வழி இயற்கை வேளாண்மைத் தன்மை கண்காணிப்பு அமைப்பு மற்றும் ஒழுங்குமுறை மேற்பார்வைக்கான மேம்படுத்தப்பட்ட கருவிகள்.
APEDA இணைய தளம்: வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் விற்பனை பங்குதாரர்களின் நலனுக்காக மேம்பட்ட ஒரு பயனர் அனுபவம் மற்றும் தகவலுடன் கூடிய APEDA இணைய தளமானது மறுவடிவமைப்பு செய்து புதுப்பிக்கப் பட்டுள்ளது.
AgriXchange இணைய தளம்: மறுவடிவமைப்பு செய்து புதுப்பிக்கப்பட்ட AgriXchange என்ற இணைய தளமானது, பயனர்களுக்கு ஏதுவாக வேளாண் ஏற்றுமதிகளின் தரவு பகுப்பாய்வு மற்றும் அறிக்கைகள் மற்றும் ஒரு தரவு உருவாக்கத்திற்கு உதவுகிறது, என்பதால் இது பொது மக்கள் எளிதில் அணுகக்கூடியதாக அமைகிறது.