TNPSC Thervupettagam

8வது உலகத் தீவிரவாதக் குறியீடு – 2020

December 9 , 2020 1368 days 481 0
  • இது ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு இலாப நோக்கமற்ற  அமைப்பான பொருளாதார மற்றும் அமைதி மையத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது.
  • தொடர்ந்து 2வது ஆண்டாக, 2019 ஆம் ஆண்டில் தெற்கு ஆசியப் பகுதியானது தீவிரவாதத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்தக் குறியீட்டில் ஆப்கானிஸ்தான் முதலிடத்திலும் ஈராக், நைஜீரியா, சிரியா ஆகியவை அதற்கு அடுத்தடுத்த இடங்களிலும் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
  • ஆப்கானிஸ்தான், நைஜீரியா, சிரியா, சோமாலியா  மற்றும் ஏமன் ஆகிய 5 நாடுகள் போர்ச் சூழல் கொண்ட நாடுகளாக வகைப்படுத்தப் பட்டுள்ளன.
  • கடந்த 10 ஆண்டுகளில் தீவிரவாதத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட உலகின் 8வது நாடு இந்தியா ஆகும்.
  • ஜம்மு காஷ்மீர் மற்றும் சத்தீஸ்கர் ஆகியவை இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டு முன்னிலையில் உள்ள பகுதிகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்