TNPSC Thervupettagam

8வது கண்டம் – கிரேட்டர் அட்ரியா

September 30 , 2019 1790 days 807 0
  • நெதர்லாந்தைச் சேர்ந்த புவியியல் வல்லுநர்கள் ஐரோப்பாவின் அடியில் மத்தியத் தரைக் கடல் பிராந்தியத்தில் கிரேட்டர் அட்ரியா எனப் பெயரிடப்பட்ட ஒரு புதிய கண்டத்தைக் கண்டறிந்து இருக்கின்றனர்.
  • இந்த கிரேட்டர் அட்ரியா தீவு என்பது கிரீன்லாந்தின் அளவைக் கொண்ட கண்டத் தகட்டின் ஒரு பகுதியாகும்.
  • இது ஒரு காலத்தில் வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து பிரிந்து தெற்கு ஐரோப்பாவின் கீழ் பூமியின் மேலோட்டின் கீழ்ப்பகுதியில் சரிந்தது.
  • மனித இனத்தால் கிரேட்டர் அட்ரியா கண்டறியப்படுவதற்கு அது 120 மில்லியன் வருடங்களை எடுத்துக் கொண்டது.
  • இந்தக் கண்டத்தின் மீதமிருக்கும் ஒரே பகுதியானது இத்தாலிய தீபகற்பத்தில் அட்ரியாட்டிக் கடல் வழியாக இத்தாலியின் துரின் பகுதியிலிருந்து நீளும் ஒரு பட்டைப் பகுதி இதுவாகும். எனவே இதன் பெயர் கிரேட்டர் அட்ரியா என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்