டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் 2022 ஆம் ஆண்டின் டிஜிட்டல் இந்தியா வாரக் கொண்டாட்டத்தினைப் பிரதமர் அவர்கள் குஜராத் மாநிலத்தில் உள்ள காந்தி நகரில் தொடங்கி வைத்தார்.
இந்த டிஜிட்டல் இந்தியா வாரத்தின் கருத்துரு, நாட்டினை டிஜிட்டல் முறையில் வலுப் பெற்றச் சமூகமாகவும் அறிவு நிறைந்தப் பொருளாதாரமாகவும் மாற்றுவதற்கு ‘புதிய இந்தியாவின் தொழில்நுட்பத்தை ஊக்குவித்தல்’ என்பதாகும்.
வணிகம் செய்வதை எளிதாக்குவதையும், வாழ்க்கை முறையை எளிதாக்குவதையும் வலுப்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.